சூர்யாவுடன் ஜோடி சேரும் 23 வயது விஜய் பட நடிகை.. மாஸ் காட்டும் இளம் ஹீரோயின்
மமிதா பைஜூ
ப்ரேமலு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை மமிதா பைஜூ. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தமிழில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதுவும் தளபதி விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் அப்டேட் வரப்போகிறது என்றும் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இரண்டு வானம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி சென்சேஷனல் ஹீரோ பிரதீப் ரங்கநாதத்தின் புதிய படத்தின் ஹீரோயினும் இவர் தான். இப்படியிருக்க, தனுஷின் புதிய படத்தில் மமிதா பைஜூ கமிட்டாகியுள்ளார் என நேற்று தகவல் வெளிவந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
சூர்யா - மமிதா பைஜூ
இந்த நிலையில், சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கவைக்க போவதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரேமலு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் மமிதா பைஜூ நடிக்கவிருந்தார். ஆனால், அப்படத்திலிருந்து அதன்பின் அவர் வெளியேறினார். இதுகுறித்து அவரே பேட்டிகளில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
