நடிகை மமிதா பைஜூ வாங்கியுள்ள புதிய கார்.. விலை எவ்வளவு, என்ன கார் தெரியுமா?
Mamitha baiju bought new car: நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் புதிய கார் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய கார் மற்றும் அதனுடைய விலை என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மமிதா பைஜூ
தென்னிந்திய சினிமாவில் இன்றைய தேதியில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் மமிதா பைஜூ. விஜய், நிவின் பாலி, சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

என்னதான் முன்னணி ஹீரோக்களின் படத்தில் இவர் நடித்திருந்தாலும், கதை இவரை சுற்றியதாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு முக்கியமான நடிகையாக மாறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த நடிகைகளில் ஒருவராகவும் சாதனை படைத்துள்ளார் மமிதா பைஜூ. ஜனநாயகன் ரூ. 320 கோடி, விஸ்வநாத் & சன்ஸ் ரூ. 220 கோடி, பெத்லகேம் குடும்ப யூனிட் ரூ. 335 கோடி மற்றும் கர ரூ. 60 கோடி என இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் வசூல் செய்துள்ளன.
புதிய கார்
நடிகை மமிதா பைஜூ அண்மையில் Volkswagen Taigun என்கிற கார் வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ. 23 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri