நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த பெரிய பெருமை! 50 ஆண்டுகள் நடிப்புக்கு கௌரவம்
நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆக இருந்து வருகிறார். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும் தற்போது ஒரு முன்னணி ஹீரோ என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
பெருமை
தற்போது நடிகர் மம்மூட்டி சினிமா துறைக்கு கடந்த 5 தசாப்தங்களாக கொடுத்த பங்களிப்பு பற்றி கேரளாவில் பட்டப்படிப்பு பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறதாம்.
எர்ணாகுளத்தில் இருக்கும் மகாராஜா கல்லூரியில் BA வரலாறு பாடத்திட்டத்தில் History of Malayalam Cinema என்ற பெயரில் அந்த பாடம் இருக்கிறது.
மம்மூட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.