நடிகர் மம்மூட்டியின் 74வது பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
இந்திய சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. 1971ம் ஆண்டு சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இவர் 54 வருடங்களாக பயணித்து கொண்டு இருக்கிறார்.
மம்மூட்டி பிறந்தநாள்
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக இருக்கும் நடிகர் மம்மூட்டிக்கு இன்று 74வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றிய முழுவ விவரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. நடிகர் மம்மூட்டியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 340 கோடி ஆகும்.
இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் இவருடைய வருட வருமானம் மட்டுமே ரூ. 50 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர்.
இவர் G-Class Mercedes, Range Rover Sport, Audi A7, Jaguar XJ உள்ளிட்ட பல கோடி கணக்கில் மதிப்பிலான சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார். கேரளாவில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ. 4 கோடி.