புதிதாக சொகுசு கார் வாங்கிய நடிகை மம்தா மோகன்தாஸ்.. வெளிவந்த புகைப்படங்கள்
மம்தா மோகன்தாஸ்
மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் மம்தா மோகன்தாஸ். இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த சிவப்பதிகாரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன்பின் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை மம்தா மோகன்தாஸ், தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறதாம்.
மம்தா மோகன்தாஸ் ஒரு நடிகை மட்டுமல்ல, திறமையான பின்னணி பாடகியும் ஆவார். இவர் குரலில் பாடி இதுவரை பல பாடல்கள் வெளிவந்துள்ளது. தமிழில் விஜய்யின் வில்லு படத்தில் இடம்பெறும் டாடி மாமி மற்றும் கோவா படத்தில் இடம்பெறும் இடை வழி போன்ற பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் வாங்கிய மம்தா
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் மம்தா மோகன்தாஸ் சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்த BMW Z4 M40i என்கிற சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ. 90 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
BMW Z4 M40i காரை வாங்கியதுபோது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற பெரியார்; கொதித்த நிர்மலா சீதாராமன் - கொளத்தூர் மணி பதிலடி IBC Tamilnadu

1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
