துணிவு படம் பார்த்துவிட்டு வங்கி கொள்ளையடிக்க சென்ற நபர்! வசமாக சிக்கிய வீடியோ
துணிவு
ஹெச் வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் தற்போது வரை வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது.இப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றபோது வசமாக மாட்டிக்கொண்டார்.
இந்நிலையில் இதே போன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது, திருப்பூரில் உள்ள கனரா வங்கியில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை கண்ணாடியில் மாட்டிவிட்டு, துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
கொள்ளை
அந்த நேரத்தில் அவர் வைத்திருந்த கத்தி கைநழுவி கீழே விழுந்துவிட்டது. அப்போது முதியவர் ஒருவர் அந்த மர்ம நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின் தீவிர விசாரணைக்கு பிறகு, அவர் அதே ஊரில் வசிக்கும் சுரேஷ் என்றும் இவர் பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு ஆகியவை போலி என்று தெரியவந்துள்ளது. இதோ அவர் மாட்டிக்கொள்ளும் வீடியோ.
தாராபுரம், #துணிவு பட பாணியில் பொம்மை துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
— RAMJI (@newsreporterra1) February 5, 2023
பொதுமக்கள் சமயோசிதமாக செயல்பட்டு வாலிபரை மடக்கிப் பிடித்தனர்#Thunivu #BankRobbery pic.twitter.com/hRa7FGGd6w
அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வந்த பட வாய்ப்பு.. நடிகை நயன்தாராவிற்கே இந்த நிலைமையா