மனசெல்லாம் சீரியலில் இனி அருளாக நடிக்கப்போவது இவர்தான்.. போட்டோவுடன் இதோ
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சி டிஆர்பியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.
இதனால் அவர்கள் சூப்பரான ரியாலிட்டி ஷோக்களையும், நிறைய நல்ல கதைக்களத்தை கொண்ட தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
மனசெல்லாம்
அப்படி சமீபத்தில் இளம் கலைஞர்கள் நடிக்க ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் மனசெல்லாம். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமான அருள் வேடத்தில் ஜெய் பாலா நடித்து வந்தார்.
ஆனால் அவர் சில காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார், ரசிகர்களும் வருத்தம் அடைந்தார்கள். இந்த நிலையில் மனசெல்லாம் சீரியலில் இனி அருள் கதாபாத்திரத்தில் நடிகர் சுரேந்தர் நடிக்க உள்ளாராம்.
ஜெய் பாலா வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் சுரேந்தர் கமிட்டானதற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.