சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மானசியின் முதல் பதிவு.. மிகவும் உருக்கமான ஒன்று
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதன் 8வது சீசன் தற்போது நடைபெறுகிறது. சென்ற வாரம் சூப்பர் சிங்கர் சீசன் 8ல், டிக்கெட் டு ஃபினாலே சுற்று நடைபெற்றது.
இதில் முத்து சிற்ப்பி, முதல் பைனலிஸ்ட் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த டிக்கெட் டு ஃபினாலே சுற்றில் மானசி என்பவர், நடுவார்களால் எலிமினேட் செய்யப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இவரது எலிமினேஷன் போது, அங்கிருந்த பலரும் கண்கலங்கினார்கள். குறிப்பாக சக போட்டியாளரான அபிலாஷ், மானசி எனக்கு ஒரு தங்கை போல் என கூறி கண்கலங்கினார்.
இந்நிலையில், சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள மானசி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதில், 'முதலில் தாய் தந்தைக்கு நன்றி. நான் சூப்பர் சிங்கர் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். நடுவர்களுக்கு நன்றி. எனது குடும்பம் பெரிதாகியுள்ளது. மீண்டும் உங்களை எல்லாம் வைல்ட் கார்ட் சுற்றின் மூலம் சந்திக்கிறேன்' என, இத்துடன் இணைந்து பல விஷயங்களை உருக்கமாக பதிவு செய்துள்ளார்.