இன்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யாரும் எதிர்ப்பார்த்திராத பிரபலம், ரசிகர்கள் ஷாக்- முதல் Finalist இவரா?
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெரியவர்களுக்கான நிகழ்ச்சியில் இப்போது 8வது சீசன் ஒளிபரப்பாகிறது.
இதில் ரசிகர்களின் மனதை பல போட்டியாளர்கள் கவர்ந்துவிட்டார்கள். நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது, யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்வி இப்போது ரசிகர்களிடம் ஓடுகிறது.
தற்போது நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல். ஆரம்பத்தில் இருந்து நிறைய பாடல்களை பாடி நடுவர்கள் மற்றும் ரசிகர்களின் மனதை கவர்ந்த மானசி இன்றைய நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனதாக தகவல்கள் வந்துள்ளன.
அவர் பைனலுக்கு கண்டிப்பாக தேர்வு ஆவார் என்று பார்த்தால் எலிமினேட் என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.
அதேசமயம் முத்துசிற்பி பைனலுக்கு தேர்வாகியுள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.