பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
Mandaadi movie 10 days box office: கடந்த வாரம் திரைக்கு வந்த மண்டாடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் நிலையில், 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மண்டாடி
நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார். விடுதலை, கருடன், மாமன் என தொடர்ந்து ஹிட் படங்களின் வரிசையில் தற்போது மண்டாடியும் இணைந்துள்ளது. வெற்றிமாறன் மூலம் இவருக்கு விடுதலை திரைப்படம் கிடைக்க, வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மூலம் மண்டாடி வெற்றி கிடைத்துள்ளது. தெலுங்கில் பிரபலமான நடிகராக வலம் வந்த சுஹாஸ் இப்படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார்.

மேலும், நடிகை மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாப்பி ராஜ், இருமுடி, விஸ்வநாத் & சன்ஸ், இம்மார்ட்டல் படங்களை தொடர்ந்து ஜி.வி-க்கு இந்த ஆண்டு மண்டாடி படமும் மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த மண்டாடி திரைப்படத்திற்கு மக்கள் பேராதரவு தந்து கொண்டிருக்கின்றனர். இதனால் வசூல் முதல் நாளில் இருந்தே அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள சூரியின் மண்டாடி திரைப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 86 கோடி வசூல் செய்துள்ளது.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan