பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் தமிழ்நாட்டில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Sep 13, 2026 09:40 AM GMT
Report

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அதனுடைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான மண்டாடி திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

முதலமைச்சர் விஜய்க்கு ரேஸ் கார் ஓட்ட கற்றுக்கொடுத்த அஜித், ட்ரெண்டிங் வீடியோ

முதலமைச்சர் விஜய்க்கு ரேஸ் கார் ஓட்ட கற்றுக்கொடுத்த அஜித், ட்ரெண்டிங் வீடியோ

ஆக்ஷன் ஹீரோ சூரி

நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை சினிமாவில் ஆரம்பித்து, விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கி, இன்று மண்டாடி திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகனாக மாறியுள்ளார் நடிகர் சூரி.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் தமிழ்நாட்டில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 3 Days Tamilnadu Box Office

மண்டாடி

அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான மண்டாடி திரைப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் மூலம் பிரபல தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாகியுள்ளார். வில்லனாக இவர் இப்படத்தில் மிரட்டியிருந்தார். இதனால் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் இவரை நிச்சயமாக நாம் பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் தமிழ்நாட்டில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 3 Days Tamilnadu Box Office

மேலும், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான மண்டாடி திரைப்படம் உலகளவில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாளிலிருந்தே வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

சர்தார் 2, 1% என்றால் மண்டாடி 10%-ஆ!! BookMyShow-ல் அடித்து நொறுக்கும் மண்டாடி

சர்தார் 2, 1% என்றால் மண்டாடி 10%-ஆ!! BookMyShow-ல் அடித்து நொறுக்கும் மண்டாடி

தமிழ்நாடு வசூல்

உலகளவில் மண்டாடி திரைப்படம் 3 நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ. 18.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள சிறந்த வசூலாகும்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் தமிழ்நாட்டில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 3 Days Tamilnadu Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US