சூரி ஹீரோவாக நடிக்கும் மண்டாடி படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா.. அடேங்கப்பா!
மண்டாடி
விடுதலை படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் சூரி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த கருடன், மாமன், விடுதலை 2 ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

அடுத்ததாக சூரி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் மண்டாடி. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

படத்தின் பட்ஜெட்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களின் படகு ரேஸை மையமாக வைத்து உருவாகி வரும் மண்டாடி படத்தின் பட்ஜெட் ரூ. 80 கோடி என கூறப்படுகிறது.

சூரியின் திரை வாழ்க்கையில், அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் இதுவே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu