மண்டாடி திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான மண்டாடி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூரி
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, இன்று முன்னணி ஆக்ஷன் ஹீரோ என்கிற இடத்தை பிடித்துள்ளார். விடுதலை 1 & 2, மாமன், கருடன் என தொடர்ந்து ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளிவந்த திரைப்படம்தான் மண்டாடி.

மண்டாடி
அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுஹாஸ், நடிகை மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படகு போட்டியை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளே இப்படத்திற்கு உலகளவில் சிறப்பான வசூல் கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
ஒவ்வொரு திரைப்படத்தின் வசூலும் மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது அனைத்தையும் விட முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சூரியின் மண்டாடி திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கான சிறந்த ஓப்பனிங் ஆகும். வரும் நாட்களில் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.