Box office: மண்டாடி தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல்
Mandaadi movie Tamil Nadu box office collection: இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள மண்டாடி திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மண்டாடி
சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் மண்டாடி. வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.

தெலுங்கு நடிகரான சுஹாஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்
உலகளவில் ரூ. 131 கோடி வசூல் செய்துள்ள மண்டாடி திரைப்படம், தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மண்டாடி தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 78.5 கோடி வசூல் செய்துள்ளது.
