மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல்.. விவரம் இதோ
Mandaadi movie tamilnadu box office collection: ரூ. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த வாரம் வெளியான மண்டாடி திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
மூக்கு அரிக்குதுனு சொரிந்தால் கூட விஜய் பத்தி ஏதோ நினைக்கிறார்னு சொல்லுவாங்க சார் - அஜித் அடித்த கிண்டல்
மண்டாடி
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ள நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மண்டாடி. வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படகு போட்டியை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் மண்டாடி திரைப்படம், உலகளவில் 9 நாட்களில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
