விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து பேசிய மணி ரத்னம்.. என்ன சொன்னார் தெரியுமா

By Kathick Nov 19, 2023 05:00 AM GMT
Report

ரசிகர்களின் சண்டை

தமிழ் சினிமாவில் எந்த விஷயம் ஓய்ந்தாலும் சரி, நடிகர்களின் ரசிகர்கள் சண்டை ஓயவே ஓயாது. நேற்று ரஜினி - கமல் ரசிகர்கள், இன்று விஜய் - அஜித் ரசிகர்கள் என தொடர்ந்து இந்த ரசிகர்கள் இடையே சண்டை நடந்துகொண்டே தான் இருக்கிறது.

அதுவும் குறிப்பாக தற்போது விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள் எல்லாம் மிகவும் மோசமான வகையில் இருக்கிறது.

விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து பேசிய மணி ரத்னம்.. என்ன சொன்னார் தெரியுமா | Mani Ratnam About Fans Fight In Social Media

சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினர்களுக்கும் தங்களுக்கு பிடித்த நடிகர்களை தூக்கி பேசுகிறோம் என்ற பெயரில் எதிரில் உள்ள நடிகரையும், நடிகரின் குடும்பத்தை பற்றிய கீழ்த்தனமாக பேசுகிறார்கள்.

அதையும் மீறி இந்த நடிகரின் ரசிகர், அந்த நடிகரின் ரசிகரின் குடும்பத்தை தவறாக பேசுவது போன்ற விஷயங்களும் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வருகிறது.

9 நாட்களில் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

9 நாட்களில் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

மணி ரத்னம் பேச்சு

இந்நிலையில், தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக பயணித்து வரும் இயக்குனர் மணி ரத்னம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.

விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து பேசிய மணி ரத்னம்.. என்ன சொன்னார் தெரியுமா | Mani Ratnam About Fans Fight In Social Media

இதில் பேசிய அவர் 'சமூக வலைத்தளத்தில் இருக்கும் பலரும் விஷயத்தை தான் கக்குகிறார்கள். இது தெருவில் நின்று சண்டை போடுவது போல் இருக்கிறது. முக்கியமான விஷயம், சீரியஸான ஒரு விஷயம் என்றால் அது குறித்து பேசுவது பரவாயில்லை. ஆனால், எனக்கு விஜய் பிடிக்கும் அஜித் பிடிக்கும் என்று சண்டை போட்டு கொள்வது கொஞ்சம் கூட உணர்வு பூர்வமாக இல்லை' என கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US