பொன்னியின் செல்வன் படத்தில் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள்.. ஆனால்
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்களில் நடித்துள்ளார்கள்.

முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர், நடிகைகள்
இந்நிலையில், கடந்த பல வருடங்களுக்கு முன்பே மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உருவாகவிருந்தது. ஆனால், அப்போது ஏற்பட்ட சில சூழ்நிலை காரணமாக படம் கைவிடப்பட்டது. அப்போது துவங்கவிருந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருந்த நடிகர்கள் இவர்கள் இல்லையாம்.
விஜய், மகேஷ் பாபு, சூர்யா, விக்ரம், விஷால், பிரியங்கா சோப்ரா, அசின், அனுஷ்கா ஷெட்டி இவர்கள் தான் அப்போது உருவாகவிருந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மணி ரத்னம் தேர்ந்தெடுத்திருந்தாராம்.

இதில் விக்ரமை தவிர்த்து அணைத்து நடிகர்களும் தற்போது மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.