வாரிசு நடிகரை ஆபிஸுக்கு அழைத்து அவமானப்படுத்தினாரா மணி ரத்னம்.. கோபத்தில் வெளியேறிய நடிகர்
மணி ரத்னம்
இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணி ரத்னம். கடைசியாக பொன்னியின் செல்வன் படம் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தார்.
இதை தொடர்ந்து தற்போது கமலுடன் தக் லைஃப் படத்திற்காக கைகோர்த்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தில் கமிட்டாகி நடிக்கவிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இருவரும் மீண்டும் படத்தில் இணைந்துவிட்டார்களாம்.
அவமானப்படுத்தினாரா
இதில் நடிகர் துல்கர் சல்மான் வெளியேறியதற்கு காரணம் மணி ரத்னம் செய்த விஷயம் தான் என திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. துல்கர் சல்மானை தனது ஆபிஸுக்கு அழைத்துள்ளார். ஆனால், இயக்குனர் மணி ரத்னம் அதே ஆபிஸில் இருந்துகொண்டு துல்கர் சல்மானிடம் வந்த பேசவில்லையாம்.

கலாநிதி மாறன் மகள் காவ்யாவை பார்க்கும் போது BP ஏறுது.. ரஜினி சொன்ன வார்த்தை! வெளுத்து வாங்கிய சம்பவம்
தன்னுடைய துணை இயக்குனரை அனுப்பிவைத்தாராம். இதனால் கடுப்பாகி தான் துல்கர் சல்மான் தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என சொல்லப்படுகிறது. பின் மணி ரத்னத்தின் மனைவியும், பிரபல நடிகையுமான சுஹாசினி, துல்கர் சல்மானிடம் பேசி படத்தில் மீண்டும் இணைய வைத்துள்ளார் என பேசப்பட்டு வருகிறது.
ஆனால், மணி ரத்னம் அப்படி செய்யக்கூடிய நபர் இல்லை என்றும், இதுபோல் ஒரு விஷயம் நடக்கவே இல்லை , இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
