அஜித் சமையல் செஞ்சா நல்லவரா? குற்றம் சாட்டி பகிரங்கமாக பேசிய நபர்! ஆதாரம் இது தானாம்!
நடிகர் அஜித் மீது திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எவ்வளவு பெரிய அன்பும், மரியாதையும் இருக்கிறது என்பதை ரசிகர்கள் உணர்வார்கள் தானே. இந்நிலையில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவர் அஜித்தின் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இதில் அவர் கடந்த 1996 ல் தன் அப்பா, அம்மா பயண செலவுகளுக்கு ரூ 6 லட்சம் கேட்டு வாங்கி பின்னர் அந்த பணத்தை நான் வாங்கவே இல்லை என்று அஜித் ஏமாற்றிவிட்டார், இதற்கான வங்கி ஆதாரம் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு படத்திற்காக ரூ 12 லட்சம் கொடுத்து அந்த படம் கைவிடப்பட்டதாகவும் பின்னர் மற்றறொரு சமயத்தில் படம் நடித்து தருகிறேன் என்று சொல்லி அந்த தொகையை திருப்பிக்கொடுக்கவில்லை என்றும் மாணிக்கம் நாராயணனன் கூறியுள்ளார்.
இந்த ரூ 18 லட்சத்தை 20 வருடங்களுக்கு மேலாக நான் கேட்கவே இல்லை, இப்போது எனக்கு பணம் தேவைப்படுகிறது அதனால் தான் கேட்கிறேன் என்று கூறியுள்ள ஆதாரத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் மீது வழக்குப் போடப் போவதில்லை. அஜித் தானாக உணர்ந்து தனது பணத்தை கொடுக்க முன்வந்தால் மட்டுமே அது திருப்பி கிடைக்கும். அஜித் சமையல் செய்வது எல்லாம் நல்லவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மனிதர்களை மதித்தால் மட்டுமே நல்லவராக போற்றப்படுவார்கள்” என்று காட்டமாக விமர்சித்தார்.
