அஜித், ரகுவரன் போல் பேசி மிரளவைத்த மணிகண்டன்.. வைரலாகும் வீடியோ
கலக்கப்போவது யாரு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ். இதில் இந்த வாரம் வரவிருக்கும் எபிசோடில் குட் நைட் படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
வருகிற 12ஆம் தேதி மணிகண்டன் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் நைட். இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்துள்ளார்கள்.
மிரண்டுபோன போட்டியாளர்கள்
அப்போது குட் நைட் படக்குழுவின் கதாநாயகன் தமிழ் சினிமா நடிகர்களை போல் பேசி அசத்தினார். முதலில் அஜித் போல் மூன்று வகைகளில் பேசினார். குறிப்பாக வாலி படத்தில் அஜித் எப்படி பேசினாரோ அதே போல் பேசி அனைவரையும் அசரவைத்துவிட்டார்.
தொடர்ந்து நடிகர் கிஷோர் போல் பேசினார். அதன்பின் ரகுவரன் போல் பேசியதும் அனைவரும் ஷாக்காகிவிட்டனர். சாதாரணமாக ரகுவரனின் வில்லன் குரலை பலரும் பேசி நாம் கேட்டிருப்போம்.
ஆனால், அவருடைய கடைசி காலகட்டத்தில் பேசிய குரலை அழகாக பேசினார் மணிகண்டன். குறிப்பாக யாரடி நீ மோஹினி படத்தில் ரகுவரன் எப்படி பேசியிருப்பாரோ அதே போல் பேசினார். அது தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
மணிகண்டன் இப்படி பேசியது அங்கிருந்த போட்டியாளர்கள் பலரும் மிரண்டு போய்விட்டனர்.
இதோ அந்த வீடியோ..
உங்களுக்குள்ள இப்படி ஒரு talent இருக்கா ?? #Manikandan
— Vijay Television (@vijaytelevision) May 9, 2023
கலக்கப்போவது யாரு Champions Season 4 - வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KPYChampions4 #KPY #KPYChampions #VijayTelevision pic.twitter.com/AknZRlNsRO
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
