3 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குடும்பஸ்தன்
ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இளம் நடிகர் மணிகண்டன். இதை தொடர்ந்து வெளிவந்த குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய திரைப்படங்கள் இவரை ஹீரோவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.
யதார்த்தமான நடிப்பில் பாராட்டுகளை அள்ளிக்குவித்து வரும் நடிகர் மணிகண்டன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் குடும்பஸ்தன். அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் குருசோமசுந்தரம், சான்வி மேக்னா, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல்
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் மூன்று நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மூன்று நாட்களில் குடும்பஸ்தன் திரைப்படம் உலகளவில் ரூ. 6.2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்! IBC Tamilnadu

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
