மணிகண்டன் மிஸ் செய்த ஹிட் படம்.. இப்போது வருத்தப்படும் நடிகர்
நடிகர் மணிகண்டன் சமீபத்தில் குடும்பஸ்தன் படத்தில் நடித்ததன் மூலமாக பெரிய அளவில் பேசப்பட்டவர். அவரது மிமிக்ரி திறமைக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி அதன் பிறகு தான் படங்களில் அவர் நடிக்க தொடங்கி தற்போது முக்கிய நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

சூது கவ்வும்
விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில் எதாவது ஒரு ரோலில் நடிக்கும்படி நடிக்க மணிகண்டனுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் அவர் அந்த நேரத்தில் நரை எழுதும் சுயசரிதம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
"அதனால் தான் அதில் நடிக்க முடியாமல் போனது. அந்த படத்தில் நடித்த எல்லோரும் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இப்படி ஒரு வாய்ப்பை விட்ட நீ உருபடவே மாட்டேன் என பலரும் திட்டினார்கள்" என மணிகண்டன் கூறி இருக்கிறார்.
