புது வெப் சீரியஸில் இணையும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள்.. யார் தெரியுமா?
வெப் சீரியஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களிவ் ஒருவர் விஜய் சேதுபதி. இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் வாழ்க்கையை கணக்காளராக தொடங்கினார்.
கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார். இவர் பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு தனி இடத்தை ரசிகர் மத்தியில் உருவாக்கியவர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. மகாராஜா படம் விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் 50வது படம், பல நடிகர்களை போல 50வது மாஸ் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது.

வெப் சீரியஸ்
இதைத்தொடர்ந்து தற்போது இவர் ஒரு வெப் சீரியஸில் நடிக்க போகிறார். இந்த சீரியஸிற்கு நடிகர் விஜய் சேதுபதி உடன் குட் நைட் படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகர் மணிகண்டன் இணைந்து நடிக்கவுள்ளார்.
இந்த வெப் சீரிஸ் டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வெப் சீரிஸ்க்கு முத்து என்கிற கட்டான் என்னும் தலைப்பும் வைத்துள்ளனர்.
இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கப்போகும் முதல் தொடர் என்பதால் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு அமைத்துள்ளது. எவ்வாறு இந்த கூட்டணி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri