சம்பளமும் கொடுக்குறாங்க விருதும் கொடுக்குறாங்க.. நடிகர் மணிகண்டன் ஓப்பன் டாக்
நடிகர் மணிகண்டன்
குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என தொடர்ந்து மூன்று ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் நடிகர் மணிகண்டன். வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் மக்களிடையே அதிக கவனத்தை இவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் மணிகண்டன் தனது சினிமா பயணம் குறித்து சமீபத்தில் நடந்த விருது விழா மேடையில் மனம் திறந்து பேசியுள்ளார். அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஓப்பன் டாக்
"சினிமாவில் எனது பயணம் சிரமமாக இல்லை ஆனால், பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த இடத்திற்கு எல்லாம் நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தீர்களா என்று கேட்டால், ஆமாம் நான் எதிர்பார்த்தேன் தான்.
எல்லாருக்கும் ஷாருக்கான் மாதிரி ஆகணும்னு ஆசை இருக்கும் தான். ஆனால், ஷாருக்கான் ஆவதற்கு என்ன பண்ண வேண்டும் என்று இருக்கு இல்ல, அதுதான் எனக்கு பயமா இருக்கு. பிடித்த வேலையை செய்வதற்கு இங்கு சம்பளமும் கொடுக்குறாங்க விருதும் கொடுக்குறாங்க. அப்போ எப்படி இந்த பயணம் சிரமமாகும் கண்டிப்பாக இல்லை" என பேசியுள்ளார்.