காந்தாரா சாப்டர் 1 படத்தில் தமிழ் நடிகர் மணிகண்டன்.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?
காந்தாரா சாப்டர் 1
கடந்த 2022ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் இருந்து வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் காந்தாரா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதனுடைய அடுத்த பாகமாக தற்போது 'காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர் 1' எனும் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும் ருக்மிணி வசந்த், சப்தமி கவுடா, ஜெயராம், குல்ஷன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரம்மாண்டமான படமாக காந்தாரா சாப்டர் 1 தெரிகிறது என பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், காந்தாரா படத்தில் இருந்த அந்த தாக்கத்தை காந்தாரா சாப்டர் 1 டிரைலர் தரவில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

சரி, படம் வெளிவரும்போது அது எப்படிப்பட்ட தாக்கத்தைக் கொடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மணிகண்டன்
இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தில் தமிழ் டப்பிங் யார் பேசியுள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா. அட அது வேறு யாருமில்லை நம்ம தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் மணிகண்டன்தான். ஆம், காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகன் ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங்கில் மணிகண்டன் குரல் கொடுத்துள்ளார்.

ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri