இதுதான் கடைசி, தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ.. இதோ
மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி இப்போது கலக்கிக் கொண்டிருப்பவர் மணிமேகலை.
அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய நேரத்தில் திருமணம் ஆக அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.
விஜய்யில் அவருக்கு மிகவும் பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கோமாளியாக கலக்கியவர் சில எபிசோடுகளுக்கு பிறகு அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்தார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் விஜய் டிவி விட்டே வெளியேறினார்.
கடைசிநாள்
அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்தவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி என்பதை தாண்டி மணிமேகலையின் பங்கு அதிகம் உள்ளது, அதை கண்டிப்பாக ரசிகர்களும் ஒப்புக் கொள்வார்கள்.
தற்போது நிகழ்ச்சி பிரம்மாண்டமாக முடிவுக்கு வர இந்த சீசனின் கடைசி நாள் என ஒரு எமோஷ்னல் வீடியோ வெளியிட்டுள்ளார் மணிமேகலை.

சென்னையில் இன்று முதல் பார்க்கிங் கட்டணம் கிடையாது - மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு IBC Tamilnadu
