Cwc நிகழ்ச்சியில் நான் பட்ட கஷ்டம், கண்கலங்க பேசிய மணிமேகலை... வைரலாகும் வீடியோ
குக் வித் கோமாளி
சிரிக்க மறக்க மக்களை சிரிக்க வைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டது தான் குக் வித் கோமாளி.
தொடர்ந்து 4 சீசன்களை மக்களை மிகவும் கலகலவென சிரிக்க வைத்த குழுவினர் இப்போது அப்படியே பிரிந்துவிட்டார்கள்.
5வது சீசன் புதுகுழுவுடன் தொடங்கப்பட பழைய குக் வித் கோமாளி போல் இல்லை என்பது மக்களின் வருத்தமாக இருந்தது.
இப்போது நிகழ்ச்சியும் முடிவுக்கு வர ஒரு வருத்தமான விஷயமும் நடந்துள்ளது.
மணிமேகலை
இந்த 5வது சீசனில் தொகுப்பாளினியாக கலக்கிய மணிமேகலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளால் வெளியேறியுள்ளார்.
தான் எதற்காக வெளியேறினேன், என்ன பிரச்சனை என்று அவர் கூற அது இப்போது பூகம்பம் போல் வெடித்துள்ளது.
இந்த நிலையில் மணிமேகலைக்கு பழைய சீசன் ஒன்றில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இணைந்து மணிமேகலைக்கு விருது வழங்குகிறார்கள். அதைப்பெற்றுக்கொண்டு பேச தொடங்கிய மணிமேகலை கொஞ்சம் எமோஷ்னல் ஆகிறார். பின் பேசியவர் முதலில் எனக்கு கோமாளியாக சுத்தமாக வரவில்லை.
வீட்டிற்கு சென்று எல்லோரும் செமயா பண்றாங்க எனக்கு வரவில்லை என அழுதிருக்கிறேன். தொகுப்பாளராக இருந்து முதல் சீசனில் ஒரு கோமாளியாக எவ்வளவு கஷ்டப்பட்டேன் என பழைய எபிசோட் ஒன்றில் எமோஷ்னலாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ,
#Manimegalai emotional speech ?#PriyankaDeshpande#Cookwithcomali5pic.twitter.com/vFsJuyHczc
— ???? (@sha_tweetz) September 16, 2024