டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடையில் திடீரென எமோஷ்னல் ஆன தொகுப்பாளினி மணிமேகலை.. அது நடக்குமா?
மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் மணிமேகலை.
சன் மியூசிக்கில் தனது பயணத்தை முதலில் தொடங்கியவர் அதில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளின் மூலமாகவே நிறைய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
அதன்பின் பெரிய போராட்டத்துடன் தான் காதலித்த ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருடன் விஜய் டிவி பக்கம் வந்தவர் கணவருடன் சில நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதும், தொகுத்து வழங்குவதும் என இருந்தார்.
எமோஷ்னல்
அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவருக்கு பிரச்சனை ஏற்பட தற்போது அவர் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அண்மையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மேடையில் தனது தந்தை குறித்து எமோஷ்னல் ஆகி பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ,