விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்கும் போது திடீரென கண்ணீர்விட்டு அழுத மணிமேகலை- என்ன ஆனது?
மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கியதன் மூலம் தமிழக மக்களுக்கு பரீட்சயமான முகமாக மாறியவர் மணிமேகலை.
அந்த தொலைக்காட்சியில் கிடைத்த வரவேற்பு அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார். இடையில் ஒரு பாடலில் பார்த்த நபரை பிடித்துபேோக அவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.
எனவே பல பிரச்சனைகளை சந்தித்த மணிமேகலை விஜய் டிவி பக்கம் வந்து தொகுப்பாளினி, கோமாளி, போட்டியாளர் என பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.
பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுகிறேன் என்றவர் அதோடு விஜய் டிவி பக்கமும் காணவில்லை.
அழுத மணிமேகலை
சமீபத்தில் தொகுப்பாளினி மணிமேகலை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியை பேட்டி எடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, எனக்கு சில மாதத்திற்கு முன்பு என்னுடைய காலில் சிறிய அடிபட்டது, அப்போது நடக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
அதனால் நான் பட்ட வேதனையை என்னால் சொல்லவே முடியாது, அந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது உங்களுடைய வீடியோ தான். உங்களை பார்த்து நான் வியந்துவிட்டேன், இப்போது நான் இங்கு இருப்பதற்கு காரணமும் நீங்கள் தான் சார் என கதறி அழுது இருக்கிறார்.
உடனே விஜய் ஆண்டனி, மணிமேகலை கைகை பிடித்துக்கொண்டு, வாழ்க்கை பயணம் என்பது கொசுவிட ரொம்ப சின்னதானது. ஒரு சின்ன புள்ளிதான் நம்மோட வாழ்க்கை.
நம்முடைய கண்ணுக்கு இதுதான் உலகமே என்று பார்க்காமல் இந்த உலகில் உலகமே சிறு பகுதி தான் நம் வாழ்க்கை என்று நினைத்தாலே உங்களுடைய பிரச்சனை ரொம்ப சிறியதாக மாறிவிடும். உங்களைவிட உங்களது கவலைகள், பிரச்சனைகள் எல்லாம்ரொம்ப சின்னது.
நமக்கான நேரத்தை ஒதுக்கினாலலே நாம் சிறந்த முறையில் வாழ்க்கையில் வாழலாம் என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்கிறார்.