தலையில் நெருப்பு, ஜீ தமிழில் மணிமேகலை செய்த விஷயம்.. ஷாக்கான நடுவர்கள், வீடியோ இதோ
மணிமேகலை
விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த மணிமேகலை சில பிரச்சனைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறினார். அதன்பின் சர்ச்சைகள் மிகப்பெரிய அளவில் வெடித்தது.
ஒரு வழியாக அனைத்து சர்ச்சைகளும் ஓய்ந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தலையில் நெருப்புடன் மணிமேகலை
இந்த நிலையில், இந்த வாரம் நடைபெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில், தொகுப்பாளினி மணிமேகலை செய்த விஷயம் நடுவர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, அங்கு நெருப்பை வைத்து வித்தைக்காட்டி நடனமாடிய ஜோடிக்கு நடுவர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. அதன்பின், அதே போல் மணிமேகலையும் தனது தலையில் நெருப்பு சக்கரத்தை வைத்து சுற்றி, அதில் நடனமாடி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டார்.
அந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் - திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய் IBC Tamilnadu

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu
