நடிகர் அஜித்துடன் மணிமேகலை கணவர் உசைன் எடுத்த புகைப்படம்.. இதோ பாருங்க
உசைன் - மணிமேகலை
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் மணிமேகலை மற்றும் அவரது கணவர் உசைன். இவர்கள் இருவரும் இணைந்து Youtube சேனலில் செய்யும் கலாட்டாவான விஷயங்கள் மக்களை கவர்ந்தது.
மணிமேகலையின் கணவர் உசைன் நடன கலைஞர் ஆவார். ராகவா லாரன்ஸ் உடன் அவர் நடனமாடியதை பார்த்து தான் தனக்கு உசைன் மீது காதல் வந்தது என மணிமேகலை பல இடங்களில் கூறியுள்ளார்.
நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்ட உசைன் பல படங்களில் நடன கலைஞராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், வீரம் படத்தின்போது அவர் அப்படத்தில் வரும் பாடலுக்கு நடன கலைஞராக பணிபுரிந்துள்ளார் உசைன்.
அஜித்துடன் உசைன்
அப்போது அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மணிமேகலையின் கணவர் உசைன் தானா இது என கேட்டு வருகிறார்கள்.
அதற்கு உசைன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 years challenge என கூறி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதையும் பாருங்க..