நான் மதம் மாறி விட்டேனா?.. தொகுப்பாளினி மணிமேகலை கொடுத்த விளக்கம்!
மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர்கள் பலர், அதில் ஒருவர் மணிமேகலை. அந்த தொலைக்காட்சியில் பணிபுரியும் போதே ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை பெற்ற இவர் விஜய் டிவி பக்கம் வந்து அங்கேயும் கலக்கினார்.
போட்டியாளரா, தொகுப்பாளினியா எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கினார். ஆனால் விஜய் டிவியின் ஒரு ஷோவில் பிரச்சனை ஏற்பட்டதால் ஜீ தமிழ் பக்கம் வந்தவர் அட்டகாசமாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
மணிமேகலை, ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணிமேகலை ஹிந்து அவரது கணவர் ஹுசைன் முஸ்லிம், ஆனால் மதத்தை தாண்டி காதல் பெரியது என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளார்கள்.

விளக்கம்!
இந்நிலையில், தற்போது மணிமேகலை மாறி விட்டதாக கூறப்படும் தகவல் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், " எங்கள் திருமணம் நடைபெற்ற பின் நாங்கள் 6 மாதங்களில் பிரிந்து விடுவோம் என்று பலர் கூறினர். ஆனால், இன்று வரை நாங்கள் ஒன்றாக தான் உள்ளோம். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம்.
எங்களுக்கு அனைத்து மதமும் ஒன்று தான். நாங்கள் ரம்ஜான் கொண்டாடுவதை விட அதிகம் கோவிலுக்கு தான் சென்று வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
