இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்
மணிமேகலை
முதலில் தொகுப்பாளராக ஒரு பிரபல மியூசிக் சேனலில் இருந்து புகழ்பெற்று அதன் பின் விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. இங்கு அவர் தொகுப்பாளரில் இருந்து காமெடியனாக மாறிவிட்டார். குக் வித் கோமாளி ஷோவில் தற்போது முன்னணி கோமாளி அவர் தான். அவரை கொண்டாடும் ரசிகர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார். 'கடினமான முடிவு தான். ஆனால் எடுத்தாகவேண்டிய நிலை" என அவர் கூறி இருக்கிறார்.
வெளியேறுகிறேன்
இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. 'நான் வரமாட்டேன்' என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன். 2019ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன். குக் வித் கோமாளியின் உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்திருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு கிடைத்தது, அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு மணிமேகலை குறிப்பிட்டு இருக்கிறார்.
மகன்களின் பள்ளி விழாவில் ஐஸ்வர்யா ரஜினி! வைரல் புகைப்படங்கள்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
