விஜய் டிவியில் இருந்து விலகிய மணிமேகலை.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்ட்ரி
மணிமேகலை
சின்னத்திரையின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் மணிமேகலை. இவர் பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாலும், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆனால், கடந்த சீசனில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார். இதற்கு காரணம் தொகுப்பாளினி பிரியங்கா தான் என சர்ச்சை எழுந்தது. விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் பலரும், பிரியங்காவிற்கு ஆதரவாக பேசினார்கள்.
ஜீ தமிழில் மணிமேகலை
இந்த நிலையில், விஜய் டிவியில் இருந்து விலகிய மணிமேகலை தற்போது ஜீ தமிழில் தொகுப்பாளினியாக வரப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒவ்வொரு சீசனாக தொகுத்து வழங்கி வரும் ஆர்.ஜே. விஜய் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், வரவிருக்கும் புதிய சீசனில் ஆர்.ஜே. விஜய்யுடன் இணைந்து மணிமேகலையும் தொகுத்து வழங்கப்போகிறார் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான ப்ரோமோ வீடியோ வெளிவருமாம்.