பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் இசை- வெளிவந்த சூப்பர் வீடியோ
மணிரத்னம் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய இயக்குனர்களில் ஒருவர். இவரது இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் தனி வகையாக ரசனையை கொடுக்கும்.
பாடல், கதை, நடிகர்கள் என எல்லாமே ஒரு கிளாஸாக இருக்கும். யாராலும் இந்த புத்தகத்தின் தழுவலை வைத்து ஒரு கதையாக இயக்க முடியாது என்று பலரும் கூறிவந்த நிலையில் பொன்னியின் செல்வன் கதையை இப்போது இயக்கியுள்ளார் மணிரத்னம்.
இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தில் ஏகப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளார்கள்.
படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிந்துள்ள நிலையில் இசையில் கவனம் செலுத்தி வருகிறார் மணிரத்னம். அண்மையில் படத்தில் வரும் ஒரு காட்சியை விவரித்து அதற்கான இசை எப்படி வர வேண்டும் என்று மணிரத்னம் விவரிக்கும் வீடியோவை ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அவர் எப்படிபட்ட பிரம்மாண்ட காட்சியை கூறுகிறார் என்று பாருங்கள்,