குடிச்சா தான் தூக்கம் வரும்.. போதைக்கு அடிமையாக இருந்த பிரபல நடிகை!
நடிகை மனிஷா கொய்ராலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஹிந்தி நடிகையாக இருந்தாலும் தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். பம்பாய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆன அவர் அதன் பின் ஷங்கரின் இந்தியன், முதல்வன், ஆளவந்தான் போன்ற பல படங்களிலும் நடித்தார்.
இது மட்டுமின்றி அவரது கம்பேக் படமாக தனுஷின் மாப்பிள்ளை படம் அமைந்தது. அதன் பின் மனிஷாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதனுடன் பல வருடங்கள் போராடினார்.

போதைக்கு அடிமை
மனிஷா கொய்ராலா அவரது வாழ்க்கை பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார். மேலும் பேட்டிகளில் பேசும்போது அவர் போதைக்கு அடிமையாக இருந்தது பற்றியும் புற்றுநோய் உடன் போராடியது பற்றியும் ஓப்பனாக பேசுகிறார்.
சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதிக நேரம் பார்ட்டியில் தான் இருக்க விரும்பினாராம் அவர். ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையாகி எல்லா நேரத்திலும் குடித்து இருக்கிறார். கெரியரில் கவனம் செலுத்தாமல் போதையால் பல தவறான முடிவுகளையும் எடுத்து இருக்கிறார்.
குடித்தால் தான் தூக்கமே வரும் என்கிற நிலையில் அவர் இருந்ததாக பேட்டியில் கூறி இருக்கிறார் மனிஷா கொய்ராலா.

நடிகர் சரத்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆனது? கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri