சீனு ராமசாமிக்கு பதிலடி கொடுத்த நடிகை மனிஷா யாதவ்- அவர் சொன்னது உண்மையா?
மனிஷா யாதவ்
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தபோது நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கையாளர் பகீர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்- நடிகையின் கணவர் ஓபன் டாக்
அவரின் குற்றச்சாட்டிற்கு, சீனு ராமசாமி, தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்றும் மனிஷா தனக்கு நன்றி கூறிய வீடியோவையும் சீனு ராமசாமி வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட நடிகை மனிஷா யாதவ் தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகையின் பதிவு
இந்த நிலையில் நடிகை மனிஷா யாதவ் தனது X வலைதளத்தில், ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னது போலத்தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன்.
மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் பற்றி நான் சொன்னதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை, தன்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் எப்போதுமே இணைந்து பணியாற்ற மாட்டேன், சீனு ராமசாமி சார் நீங்க சொல்றது தப்பு என பதிலடி கொடுத்துள்ளார் மனிஷா யாதவ்.
@seenuramasamy @jbismi_offl pic.twitter.com/xlrkhqSbnf
— Manisha Yadav (@ManishaYadavS) November 24, 2023