பாதுகாப்பு இல்லை.. ஜீ தமிழ் சேனல் மீது அப்படி ஒரு புகார் சொன்ன நடிகை
சின்னத்திரையில் வரும் நடிகைகளுக்கும் தற்போது அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி ஜீ தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் மனிஷாஜித்துக்கு எக்கச்சக்க ரசிகர்களா இருக்கிறார்கள்.
கன்னத்தில் முத்தமிட்டால்
கன்னத்தில் முத்தமிட்டால் தொடர் சில தினங்களுக்கு முன்பு தான் 100 எபிசோடுகள் என்ற மைல் கல்லை கடந்து இருக்கிறது. இந்நிலையில் அந்த தொடரில் இருந்து மனிஷாஜித் திடீரென விலகி இருக்கிறார்.
பாதுகாப்பு இல்லை
ஷூட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்பு இல்லை, நீண்ட நாட்களாக சம்பள பாக்கி, பல லட்சம் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என பல புகார்களை மனிஷாஜித் தெரிவித்து இருக்கிறார்.
“உடல்நிலை சரி இல்லை என்றால் கூட நடிக்க வரசொல்வார்கள். ஷூட்டிங்கில் சின்ன சின்ன விபத்து நடக்கும்.. அதை கவனிக்கவும் மாட்டார்கள், தினமும் 14 மணி நேரத்திற்கும் மேல் வேலை வாங்குகிறார்கள், ஆனால் பேசியபடி சம்பளம் தருவதில்லை, ஆறு லட்சத்திற்கும் மேல் வரவேண்டி இருக்கிறது” என அவர் கூறி இருக்கிறார்.
மேலும் நான் இதை எல்லாம் கேட்டதற்கு தான் "வேறு நடிகையை பார்த்துவிட்டோம், நீங்கள் இனி வர வேண்டாம்" என சொல்லி விட்டார்கள் எனவும் நடிகை தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் மகனின் காதலியை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்