சூர்யவம்சம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர்.. இயக்குநர் விக்ரமன் ஓபன் டாக்
சூர்யவம்சம்
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி 1997ஆம் ஆண்டு வெளிவந்த படம் சூர்யவம்சம். இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் தேவயானி, ராதிகா சரத்குமார், ஆனந்த்ராஜ், மணிவண்ணன், சுந்தர்ராஜன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் மணிவண்ணன்.

முதலில் நடிக்கவிருந்த நடிகர்
ஆனால், முதன் முதலில் இவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகர் கவுண்டமணி தான் என படத்தின் இயக்குநர் விக்ரமன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது "சூர்யவம்சம் கதை பண்ணும்போது எனக்கு முதலில் கவுண்டமணி சாரை தான் மணிவண்ணன் சார் ரோல்ல போடுறதா இருந்தேன். அவருடைய கால்ஷீட் அப்போ ஒத்துவரல, ஏன்னா உள்ளத்தை அள்ளித்தா படம் அப்போ ரிலீஸ் ஆகி பெரிய ஹிட். கவுண்டமணி சார் ரொம்ப பிசி ஆகிட்டாரு. கவுண்டமணி சார் இருந்தா பிஸினஸ் ஆகும்னு ஒரு டிரெண்டு வந்துருச்சு" என கூறியுள்ளார்.