பிளாக் பாண்டிக்கு பதிலாக பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் வரப்போகும் Common Man போட்டியாளர் மணிவண்ணனா? ஆனால் இவர் அந்த வாய்ப்பிற்கு தகுதியானவரா?
மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து பிளாக் பாண்டி பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக Common Man போட்டியாளர் மணிவண்ணன் வீட்டிற்குள் வரப்போவதாக தற்போது தகவல்கள் மற்றும் யூகங்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், மணிவண்ணனின் பெயர் அடிபடுவது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரே Common Man எடிஷனில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், மணிவண்ணனை மட்டும் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் அளவுக்கு அவர் உண்மையில் தகுதியானவரா? என்ற கேள்வியும் எழுகிறது.

Common Man போட்டியாளர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த எடிஷனில், மணிவண்ணன் ஏற்கனவே அந்த அனுபவத்தை பெற்றுள்ளார். ஆனால் Main House-ல் வலுவான போட்டியாளர்களுக்கு மத்தியில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

மணிவண்ணனின் என்ட்ரி உண்மையானால், அது பிக் பாஸ் வீட்டிற்கு புதிய பரபரப்பை கொண்டு வருமா? அல்லது இந்தத் தேர்வு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்யுமா? இப்போதைக்கு இது ஒரு யூகம் மட்டுமே. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.