குண்டாக இருந்த மஞ்சிமா மோகன் வேகமாக ஒல்லியானது இப்படித்தானா.. வெளியான போட்டோ
மஞ்சிமா மோகன்
கேரளாவை சேர்ந்த நடிகை மஞ்சிமா மோகன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பின் ஹீரோயின் ஆனவர். ஒரு வடக்கன் செல்பி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அதன் பிறகு சில தமிழ் படங்களில் நடித்த மஞ்சிமா மோகன் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஒல்லியானது எப்படி?
மஞ்சிமா மோகன் குண்டாக மாறி இருப்பது பற்றி அதிகம் விமர்சனங்கள் இணையத்தில் வந்தது. இந்நிலையில் தற்போது மஞ்சிமா அவரது எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி வருகிறார்.
அவர் Aerial Yoga செய்து தான் எடையை குறைத்து இருக்கிறார். அதன் புகைப்படங்களை அவரே இன்ஸ்டாக்ராமில் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.


