கணவரை பிரிந்திருக்க என்ன காரணம்.. விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகை மஞ்சு லட்சுமி
மஞ்சு லட்சுமி
தெலுங்கு சினிமாவில் வலம் வந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன் பாபு.
இவரது மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு கலக்கியவர் மஞ்சு லட்சுமி.
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தனித்துவமான பிம்பத்தை உருவாக்கி தனது ஆங்கிலப் புலமையால் இன்னும் பிரபலமாகிவிட்டார்.
தெலுங்கை தாண்டி தமிழ் சினிமா, பாலிவுட் பக்கமும் சென்றார்.
சர்ச்சை
ஏற்கெனவே மோகன் பாபு மற்றும் அவரது மகன்கள் இடையே சொத்து பிரச்சனை நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் மோகன் பாபு மகள் மஞ்சு லட்சுமி அவரது கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதுகுறித்து நடிகை மஞ்சு லட்சுமி ஒரு பேட்டியில், எனது கணவர் ஸ்ரீனிவாஸ் வெளிநாட்டில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறார், நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம், சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை.
நாங்கள் எங்கள் விருப்பப்படி வாழ்கிறோம், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுவதன் மூலம் நாம் நம் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்வதில்லை. இப்போது எங்கள் மகள் அவரது தந்தையுடன் இருக்கிறாள் என்று கூறியுள்ளார்.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
