பைக் ரைடு சென்றுள்ள நடிகை மஞ்சு வாரியர்! எங்கு தெரியுமா? புகைப்படங்கள் இதோ
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படம் இவருக்கு நல்ல வரவேற்பை இங்கு எற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து துணிவு, ரஜினியுடன் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்ததாக மிஸ்டர் எக்ஸ் (Mr. X) படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் பைக் ரைடில் ராமேஸ்வரம் சென்றுள்ளார். இந்த பயணத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன் அஜித்துடன் இணைந்து இவர் பைக் ரைடு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படங்கள்:













