நடிகை மஞ்சு வாரியரின் மகளை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே
மஞ்சு வாரியர்
மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் 1995ல் இருந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் தான் நடிகை மஞ்சு வாரியரின் நடிப்பில் தமிழில் வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும். இதன்பின், அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சு வாரியர் மகள்
நடிகை மஞ்சு வாரியர் பிரபல மலையாள நடிகர் திலிப் என்பவரை 1998ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகள் ஒருவர் இருக்கிறார். கடந்த 2015ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று கொண்டு பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சி தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி வருகிறார். அவருடைய புகைப்படங்களும், நடன வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வர, அப்படியே மஞ்சு வாரியர் போலவே இருக்கிறாரே மீனாட்சி என கூறி வருகிறார். மேலும் விரைவில் அவரை ஹீரோயினாக எதிர்பார்க்கலாமா என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இதோ பாருங்க..
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)