அஜித்துக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! ஏகே61 ஹீரோயின் பற்றி உறுதியான தகவல்
அஜித் மற்றும் ஹெச் வினோத் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறது. ஏகே61 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை மவுண்ட் ரோட்டை போல அப்படியே அங்கு செட் போட்டு இருக்கிறார்கள் என்றும், மேலும் அங்கு பேங்க் செட் ஒன்றும் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் படத்தில் அஜித்துக்கு ஜோடி யார் என்பதை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது மலையாள நடிகை மஞ்சு வாரியர் அஜித் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மஞ்சு வாரியர் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
