கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா.. ஐஸ்வர்யா ராய் கிடையாதாம்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ராஜிவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அஜித், மம்மூட்டி, அபாஸ், ஐஸ்வர்யா ராய் மற்றும் தபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையை இன்று வரை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
அமர்க்களம் படத்தில் ஷாலினியின் முதல் நாள் படப்பிடிப்பில்- இதுவரை தெரியாத தகவலை பகிர்ந்த இயக்குனர் சரண்
வாய்ப்பை மிஸ் செய்த நடிகை
இப்படத்தில் மீனாட்சி எனும் கதாபாத்திரத்தில் பாடகியாக நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராய். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஐஸ்வர்யா ராய் கிடையாதாம்.
முதலில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தான் இப்படத்தில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க காமிட்டனராம்.
ஆனால், சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய்யை மீனாட்சியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.