எம்புரான் படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா
மஞ்சு வாரியர்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் அசுரன், விடுதலை, துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக Mr.X திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மஞ்சு வாரியர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் லூசிஃபர் 2: எம்புரான். இப்படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பு அனைவரையும் மிஞ்சிவிட்டது என விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர். முதல் பாகத்தை தொடர்ந்து இப்படத்திலும் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார்.
சம்பளம்
இந்த நிலையில், லூசிஃபர் 2: எம்புரான் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக மஞ்சு வாரியர் ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.