விடுதலை 2 படத்திற்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
இயக்குனர் வெற்றிமாறன் படம் என்றாலே கண்டிப்பாக தனி எதிர்பார்ப்பு இருக்கும். அதுவே வெற்றியடைந்த படத்தின் இரண்டாம் பாகம் என்றால் சொல்லவே தேவையில்லை.
அப்படி அதீத எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் படம் தான் விடுதலை 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்தது. இப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சூரி.
இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத சூரியை, விடுதலை படத்தில் பார்க்க முடிந்தது. சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி, கவுதம் மேனன், ராஜிவ் மேனன், தமிழ், சேத்தன் என பலரும் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் கூடுதலாக மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கென் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இதில் நடிகை மஞ்சு வாரியர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இரண்டாவது படம் தான். ஏற்கனவே அசுரன் படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு வாரியர் சம்பளம்
சமீபத்தில் விடுதலை 2 படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற டிசம்பர் 20ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளனர்.
இந்த நிலையில், விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர், இப்படத்திற்காக ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu