உலக நடன தினம்.. ரஜினி பட நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்
மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தை தாண்டி தமிழில் அதிக படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.
அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பின், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து கொண்டார்.
இந்த படத்தில் இவர் ஒரு பாடலுக்கு ஆடிய நடனம் தற்போதும் டிரெண்டிங்கில் உள்ளது.
இதை தொடர்ந்து, ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ட்ரெண்டிங்
இந்நிலையில், இன்று சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு நடிகை மஞ்சு வாரியர் குச்சிப்புடி நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.