உலகளவில் ரூ. 150 கோடி வசூல் செய்த மஞ்சும்மல் பாய்ஸ்.. தமிழகத்தில் இதுவரை எவ்வளவு தெரியுமா
மஞ்சும்மல் பாய்ஸ்
மலையாளத்தில் வெளிவந்து இன்று உலகளவில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்தை சிதம்பரன் என்பவர் இயக்கியிருந்தார்.

குணா குகையில் கேரளாவை சேர்ந்த நண்பர்களுக்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, இப்படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக இருந்த குணா படத்தின் கண்மணி அன்போடு காதல் பாடல் தற்போது படுவைரலாகி வருகிறது.
வசூல்
வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழக வசூல்
மேலும் தமிழகத்தில் இதுவரை ரூ. 39 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழில் வெளிவரும் படங்களை விட, மலையாளத்தில் உருவான இப்படத்திற்கு தமிழக மக்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளது இதன் மூலம் கண்கூடாக தெரிகிறது.